என் மலர்
செய்திகள்

திருப்பதி கோவிலில் பிரசாத கூடத்தில் திடீர் தீ விபத்து
திருப்பதி கோவிலில் பிரசாத கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து காரணமாக கோவில் வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி:
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் உள்ள வகுலமாதேவி சன்னதி அருகே அன்ன பிரசாத தயாரிப்பு கூடம் உள்ளது. ஏழுமலையானுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் இங்கு தயாரிக்கப்படுவது வழக்கம். நேற்று இரவு 7 மணிக்கு பிரசாத தயாரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறையினருக்கு கோவில் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து காரணமாக கோவில் வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story