என் மலர்

    செய்திகள்

    நடுக்கடலில் உணவு, குடிநீர் இன்றி தவித்த சீன மாலுமிகளுக்கு இந்திய கடற்படையினர் உதவி
    X

    நடுக்கடலில் உணவு, குடிநீர் இன்றி தவித்த சீன மாலுமிகளுக்கு இந்திய கடற்படையினர் உதவி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏடன் வளைகுடா நடுக்கடல் பகுதியில் உணவு, குடிநீர் இன்றி தவித்த சீன மாலுமிகளுக்கு இந்திய கடற்படையினர் உதவி செய்தனர்
    புதுடெல்லி:

    இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் தேக் கடற்படை வீரர்களுடன், ஏடன் வளைகுடா கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது நடுக்கடலில் ஒரு படகில் மின்சாரம் இல்லாமல் இருந்த 2 மாலுமிகள் இந்திய போர்க்கப்பலை நோக்கி அவசர உதவிக்கு அழைத்தனர். 

    இதையடுத்து அந்த படகின் அருகில் சென்ற இந்திய வீரர்கள் அதில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உணவு, குடி தண்ணீர் இன்றி 2 மாலுமிகள் தவிப்பதை அறிந்தனர். அந்த படகில் இருந்தது சீன நாட்டை சேர்ந்த மாலுமிகள் எனவும், அவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஜிபோத்தி என்ற நாட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. 

    இதன் பின்பு இந்திய வீரர்கள் படகில் மின்சார தட்டுப்பாட்டை சீர் செய்து உணவு, குடிநீர் ஆகிய உதவிகளையும் செய்தனர். ‘நாங்கள் மின்சார குறைபாட்டை சரி செய்தது மட்டுமல்லாமல் 10 நாட்களுக்கு தேவையான உணவு, குடிதண்ணீர் போன்றவற்றையும் சீன மாலுமிகளுக்கு வழங்கினோம்’ என இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×