என் மலர்
செய்திகள்

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்குவதை தொடர்ந்து சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது மரபாக இருந்து வருகிறது.
ஆனால் இப்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், பட்ஜெட் நடவடிக்கைகள் மே மாத மத்தியில்தான் முடியும்.
வழக்கமாக ஜூன் மாதம் பருவமழை தொடங்கி விடும். அக்டோபர் மாதம் வரையில் பெரும்பாலும் மாநிலங்களில் பெரும்பாலான திட்டங்களும், செலவினங்களும் தொடங்குவதில்லை. எல்லாவற்றிலும் தாமதம் ஏற்படுகிறது.
இதற்கு முடிவு கட்டி, பட்ஜெட்டை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் 1-ந்தேதி) அமல்படுத்தும் விதத்தில், முன்கூட்டியே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்தது.
கடந்த 92 ஆண்டு காலமாக ரெயில்வே துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ரெயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுக்கு முந்தைய நாளில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் மத்திய அரசு, ரெயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பொது பட்ஜெட்டில் ரெயில்வே பட்ஜெட்டை இணைத்துவிட தீர்மானித்தது.
இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி (அடுத்த மாதம்) 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி நாளை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஜனவரி 30ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story