என் மலர்

  செய்திகள்

  சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன்: முலாயம் சிங் அதிரடி பேட்டி
  X

  சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன்: முலாயம் சிங் அதிரடி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்று முலாயம் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சியுடன் ஆளும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்துள்ளது. 

  இதனையடுத்து ராகுல் காந்தியுடம் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து இருவரும் லக்னோ நகரின் தெருக்களில் கூட்டாக பிரச்சாரம் செய்தனர். 

  இந்நிலையில், சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்று முலாயம் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எதிரானவன். இந்த கூட்டணிக்கு 

  ஆதரவாக எங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன். சமாஜ்வாடி கட்சிக்கு தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் சக்தி உள்ளது” என்றார்.

  ஏற்கனவே சமாஜ்வாடி கட்சிக்குள் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து, தற்போது சற்றே சுமூகமாக சூழல் உருவாகி வந்துள்ளதாக கருதப்பட்ட நிலையில், முலாயம் சிங் பேட்டி மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×