என் மலர்

    செய்திகள்

    காஷ்மீர்: கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விமானச் சேவை தொடங்கியது.
    X

    காஷ்மீர்: கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விமானச் சேவை தொடங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்துவரும் கடுமையான பனிப்பொழிவால் சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகரில் உள்ள விமானநிலையத்தில், ஓடுதளமே தெரியாத வகையில் கடும் பனி மூட்டம் நிலவிவந்ததால்  நாட்டின் பிற பகுதிகளில் இருந்து, ஸ்ரீநகருக்கு வரும் விமானங்கள் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் மற்றும் விமானங்கள் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை.

    இதற்கிடையே, போதுமான அளவில் விமானங்கள் இயக்கப்படாததால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று பிற்பகலுக்குப் பிறகு பனிப்பொழிவு குறைந்து வானிலை தெளிவாக உள்ளதால் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கின. இதேபோல் பிற பகுதிகளில் இருந்து வரும் விமானங்களும் ஸ்ரீநகரில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சுற்றுலாப் பயணிகளின் தேக்கத்தை தடுப்பதற்காக கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் எனவும் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமானச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்சியடைந்துள்ளனர். 

    Next Story
    ×