search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
    X

    கோவா சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

    கோவா மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை, மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பணாஜியில் இன்று வெளியிட்டார்.
    பணாஜி:

    கோவா மாநில சட்டசபையின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது.  ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது. 

    இந்நிலையில், "ஒன்றான துடிப்பான கோவா” என்ற பெயரிலான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமையகத்தில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கோவா மாநில முதல் மந்திரி லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

    அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் பா.ஜ.க முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும் பட்னாவிஸ் கூட்டத்தில் பேசினார். இந்நிகழ்ச்சியில், கோவா மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நேற்று பணாஜியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×