search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டல்: வாலிபர் கைது
    X

    கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டல்: வாலிபர் கைது

    கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹூப் பள்ளியில் உள்ள எடியூரப்பாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ராகவேந்திராவின் அலுவலகத்திற்கு கடந்த 21-ந் தேதி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது ராகவேந்திரா அலுவலகத்தில் இல்லை.

    அங்கிருந்த அவரது நண்பர் பசவராஜா மடதாவிடம், ஒரு சி.டி.யை அந்த வாலிபர் தந்து விட்டு, இதனை ராகவேந்திராவிடம் ஒப்படைத்து, சி.டியில் உள்ள விவரத்தை, எடியூரப்பா குடும்பத்தினரிடம் தெரிவியுங்கள், எனக்கு பணத்தேவை உள்ளது. பணம் கொடுக்கா விட்டால், நான் மீடியாக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், சி.டி.நகல்களை வழங்குவேன்.. என எச்சரிக்கும் தொனியில் கூறிவிட்டு சென்றார்.

    அந்த சி.டி.யில், ‘‘கர்நாடக பா.ஜ.க. முக்கிய தலைவர்களை, கொல்ல எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காக எனக்கு பணம் கொடுத்துள்ளார் என்று அந்த வாலிபர், எடியூரப்பாவிடம் போனில் பேசியுள்ளார். ஆனால் எடியூரப்பா, ‘‘நீ சொல்வது ஒன்றும் எனக்கு புரியவில்லை. இது சம்பந்தமாக எனது மகன் ராகவேந்திராவிடம் பேசிக்கொள்’’ என கூறி போனை துண்டிக்கிறார். இந்த காட்சி சி.டி.யில் பதிவாகி உள்ளது,

    இந்த விவகாரம் குறித்து 2 நாட்களுக்கு முன்பு, ஹூப்பள்ளி போலீசில், ராகவேந்திரா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். ‘‘அவரது பெயர் முரளி என்று தெரிய வந்தது. தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், சில அரசியல் தலைவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டுள்ளதாகவும், முரளி தெரிவித்தார்.. பெங்களூரில் தொலைக்காட்சி அலுவலகத்தில் பணி செய்துள்ளதாகவும், அந்த வாலிபர் தெரிவித்தார். அவரது பேச்சு தெளிவற்றதாக இருந்ததால் அவர் மனநோயாளியாக இருக்கக்கூடும்.. என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×