என் மலர்

  செய்திகள்

  மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது
  X

  மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காள மாநிலத்தில் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
  கொல்கத்தா:

  மேற்குவங்காள மாநிலத்தில் ஹன்ஸ்க்ஹாலி மாவட்டத்தில் நாடியா பகுதியைச் சேர்ந்த மாநில அரசு ஊழியர் ஒருவரின் 3 வயது பெண் குழந்தை நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஹாசாரிநகரைச் சேர்ந்த 17 வயது வாலிபன், குழந்தையிடம் பழம் வாங்கிக் கொடுத்து நைசாக பேசி அருகிலுள்ள சாக்கு மூட்டை குடோனுக்கு கூட்டிச் சென்றுள்ளான்.

  அந்த குடோனில் வைத்து குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன், குழந்தையைத் தேடி வந்த தாயிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டான். உடனே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி அந்த வாலிபனை சரமாரியாக அடித்து, உதைத்த பின்னர் ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

  குழந்தையின் தந்தை உடனே போலீசிடம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த வாலிபனை கைது செய்தனர். 
  Next Story
  ×