search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. பா.ஜ.க. தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
    X

    உ.பி. பா.ஜ.க. தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

    உத்தர பிரதேசத்தில் இன்று வெளியிட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு பிரச்சரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகை அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * உத்தர பிரதேசத்தில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

    * தகுதிமிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    * கரும்பு விவசாயிகளுக்கு 120 நாட்களுக்குள் அனைத்து நிலுவைத்தொகையும் பட்டுவாடா செய்யப்படும்.

    * உணவு பதப்படுத்துதல் பூங்கா அமைக்கப்படும்.

    * 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும், ஏழைகளுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

    * பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    * மாணவர்களுக்கு எந்த பாரபட்சமும் இன்றி லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் 1ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும்.

    * ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும். விதவை பென்சன் பெறுவதற்கு வயது வரம்பு ஏதும் இருக்காது.
    Next Story
    ×