search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு- காஷ்மீரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6 லட்சம் பேருக்கு அபராதம்
    X

    ஜம்மு- காஷ்மீரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6 லட்சம் பேருக்கு அபராதம்

    ஜம்மு- காஷ்மீரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நவம்பர் 2௦16 வரை 6,10,947 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
    ஜம்மு:

    ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி எம்எல்ஏ அஞ்சும் பாசிலின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக முதல்வர் மெஹபூபா பதிலளித்தார். அதில், நவம்பர் 2௦16 வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,10,947 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,20,60,649 கோடி ரூபாய் அபாரதம்  வசூலிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த வருடம் 805 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்திடுமாறு சம்பந்தப்பட்ட ஆர்டிஓ-க்களிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    பார்க்கிங் இல்லாத இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை தூக்குவதற்காக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×