என் மலர்
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: மேகாலயா கவர்னர் சண்முகநாதன் ராஜினாமா ஏற்பு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா மாநில கவர்னர் சமர்ப்பித்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது பணிகளை நாகலாந்து கவர்னர் கவனிப்பார் என அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மேகாலயா மாநில புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த வி.சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நியமனம் செய்யப்பட்டார். திருமணம் ஆகாதவர். ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக 40 ஆண்டுகள் இருந்த இவர், தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவராவார். அருணாச்சலப் பிரதேசம் மாநில கவர்னரின் பணிகளையும் இவர் கூடுதலாக கவனித்து வந்தார்.
இதனிடையே, ஆளுநர் அலுவலகத்தின் மாண்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் செயல்படுவதாகவும் அவரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை ஊழியர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 98 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கடிதத்தின் நகல் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் முகுல் சங்மா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
11 அம்சங்கள் அடங்கிய அந்த கடிதத்தில், “ஆளுநர் மாளிகையின் மாண்புக்கு களங்கம் தரும் வகையில் ஆளுநர் சண்முகநாதன் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையை (ராஜ்பவன்) இளம்பெண்களின் விடுதி போல மாற்றிவிட்டார்.
இளம்பெண்கள் தமது விருப்பம் போல் வந்து தங்கவும் அல்லது திரும்பவும் ஏற்ற இடமாக கவர்னர் மாளிகை மாற்றப்பட்டுவிட்டது. தடையின்றி அவரது அறைக்கு அவர்கள் நேரடியாக வந்து செல்கிறார்கள். ஆளுநரின் இல்லத்தின் பாதுகாப்பும் விட்டுக்கொடுக்கப்படுகிறது. அவருடைய உதவிக்காக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்களாக உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆளுநர் வி.சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் வெளியானது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக மேகாலயா முதல்-மந்திரி முகுல் சங்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வி.சண்முகநாதன் அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாகவும், அவர் செய்துவந்த பணிகளை நாகலாந்து மாநில கவர்னர் பி.பி. ஆச்சாரியா கூடுதலாக கவனிப்பார் என்றும் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story