என் மலர்
செய்திகள்

பஞ்சாபில் காங்கிரஸ் வேட்பாளரின் பாதுகாவலர் மர்மச்சாவு
பஞ்சாபில் காங்கிரஸ் வேட்பாளரின் பாதுகாவலர் நரிந்தர் சிங் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதே சமயம் அமிர்தசரஸ் பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக குர்ஜித் சிங் அஜ்லா போட்டியிடுகிறார். இவருக்கு பாதுகாவலராக நரிந்தர் சிங் இருந்தார்.
குர்ஜித் சிங் அலுவலகத்துக்கு அருகே நேற்று திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே அங்கு கட்சி நிர்வாகிகள் சென்று பார்த்தபோது நரிந்தர் சிங் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததால் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நரிந்தர் சிங்கின் மர்மச்சாவு குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

Next Story