என் மலர்

  செய்திகள்

  காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
  X

  காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் குரெஸ் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.
  ஸ்ரீநகர்:

  காஷ்மீரின் குரெஸ் பகுதியில் பனிச்சிகரங்களில் அடிவாரத்தில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இங்கு பனிச்சரிவு ஏற்பட்டு சில ராணுவ வீரர்கள் இதில் சிக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 

  இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வீரர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  மூன்று வீரர்களின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பனிச்சரிவில் எத்தனை வீரர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை. கடுமையான பனிப்பொழிவு மீட்பு பணிகளை தாமதப்படுத்தி வருகிறது. 

  முன்னதாக நேற்று பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

  கடந்த மூன்று நாட்களாக ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
  Next Story
  ×