என் மலர்

  செய்திகள்

  உள்துறை மந்திரியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் சந்திப்பு
  X

  உள்துறை மந்திரியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
  புதுடெல்லி:

  உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை ஜம்மு - காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று சந்தித்தார். புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரியின் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

  ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 

  மேலும், ஜம்மு - காஷ்மீர் சட்ட சபையில், மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளை மீண்டும் குடியேற்றுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதையும், அது குறித்த விபரங்களை மந்திரியிடம், முப்தி எடுத்துக் கூறி ஆலோசனை நடத்தினார்.

  ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம், மெகபூபா முப்தி எடுத்துக் கூறியதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×