என் மலர்

    செய்திகள்

    உ.பியில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு: கற்பழித்துக் கொலையா?
    X

    உ.பியில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு: கற்பழித்துக் கொலையா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காட்டில் இளம் பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் காலித்பூர் என்ற கிராமத்தின் அருகில் உள்ள ஒரு காட்டில் இருந்து 18 வயது மிக்க இளம் பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையில் இன்று கிடந்துள்ளது. அதைப் பார்த்த அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், ஆடைகள் கலைந்த நிலையிலும், உடலில் கழுத்துப் பகுதிகளிலும் காயங்கள் இருப்பதால் அப்பெண் கற்பழிக்கப்பட்டு பின்னர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 

    சம்பவ இடத்தில் இருந்து இரண்டு செல்போன்களையும் கைப்பற்றியுள்ள போலீசார், அவை கொலையான பெண் மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமானது எனத் தெரிவித்துள்ளனர்.

    கொலை செய்த மர்ப நபரையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×