என் மலர்

  செய்திகள்

  காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை
  X

  காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் நடைபெற்று துப்பாக்கி சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
  ஸ்ரீநகர்:

  காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

  உளவுத்துறை இது குறித்து பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தது. பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர். இரு தரப்பு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

  இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்.

  இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
  Next Story
  ×