என் மலர்

  செய்திகள்

  முன்னாள் எம்.பி. தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
  X

  முன்னாள் எம்.பி. தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி முன்னாள் எம்.பி. தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்
  புதுடெல்லி:

  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மாணவர்களும், இளைஞர்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

  முன்னாள் எம்.பி. தருண் விஜய் தலைமை தாங்கி நடத்தினார். டெல்லியில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டெல்லியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் தருண் விஜய் பேசுகையில், ‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம்’, ‘ஜல்லிக்கட்டு இந்தியாவின் அதிகாரம்’ என்பன போன்ற கோஷங்களை தமிழில் எழுப்பினார். 
  Next Story
  ×