என் மலர்

  செய்திகள்

  முலாயம்சிங் வழக்கு தொடர்ந்தால் எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும்: அகிலேஷ் அணி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
  X

  முலாயம்சிங் வழக்கு தொடர்ந்தால் எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும்: அகிலேஷ் அணி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமாஜ்வாடி கட்சி பிரச்சினையில் முலாயம்சிங் வழக்கு தொடர்ந்தால் எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று அகிலேஷ் அணி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
  புதுடெல்லி:

  உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சி நிறுவனரும், தலைவருமான முலாயம்சிங் தலைமையில் ஒரு பிரிவினரும், அவரது மகனும் முதல்-மந்திரியுமான அகிலேஷ்யாதவ் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

  இதில் அகிலேஷ் யாதவின் கை தற்போது ஓங்கி உள்ளது. இந்த கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தை பெறுவதற்கு இரு தரப்பினரும் முயற்சித்தனர். ஆனால், தேர்தல் கமி‌ஷன் அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

  இது சம்மந்தமாக முலாயம்சிங் யாதவ் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அகிலேஷ்யாதவ் சார்பில் அவரது சித்தப்பாவும் கட்சியின் மூத்த தலைவருமான ராம்கோபால் யாதவ் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனுதாக்கல் செய்துள்ளார்.

  அதில், சமாஜ்வாடி கட்சி தொடர்பாக முலாயம்சிங் யாதவ் தரப்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் நேரடியாக எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு சொல்ல கூடாது. எங்களையும் வழக்கில் சேர்த்துக் கொண்டு எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  ‘கேவியட்’ மனுதாக்கல் செய்திருப்பதால் இனி முலாயம்சிங் வழக்கு தொடர்ந்தாலும், அகிலேஷ்யாதவ் தரப்பில் இருந்து கருத்து கேட்டு விவாதம் நடத்தி தான் தீர்ப்பு கூற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
  Next Story
  ×