என் மலர்

    செய்திகள்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து நக்சலைட்டுகள் கைது
    X

    சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து நக்சலைட்டுகள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ராய்ப்பூர்;

    சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தில் நக்சல் இயக்கத்தைச் சார்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் தனிப்படையினர், மர்தாபால் காவல் சரகத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீஸ் தனிப்படையின் சோதனையில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சலைட்டுகளை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் நக்சல் அமைப்பின் சிறப்பு அமைப்பான ஜன்மிலிடியா பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்னதாக பல முக்கிய குற்றங்களில் போலீசாரால் தேடப்பட்டுவந்தவர்கள்.

    மேலும், அந்தப் பகுதியில் வேறு யாரும் பதுங்கியுள்ளனரா? எனவும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×