என் மலர்

  செய்திகள்

  பா.ஜ.க.வினரை தாக்குவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பா.ஜ.க எம்.பி. எச்சரிக்கை
  X

  பா.ஜ.க.வினரை தாக்குவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பா.ஜ.க எம்.பி. எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் பா.ஜ.க தொண்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பா.ஜ.க எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் கமிட்டி கூட்டத்தில் கர்நாடக மாநில பா.ஜ.க எம்.பி நளின் குமார் கலந்து கொண்டார். 

  கூட்டத்தில் அவர் பேசும்போது, “நாடு முழுவதும் பா.ஜ.க வளர்ந்து வருவதை பொறுக்காத இடதுசாரிகள், அப்பாவி தொண்டர்கள் மீது தாக்குதலை நடத்திவருகிறது. 

  மற்ற மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறது. ஆனால், கேரள அரசு அரசியல் கொலைகளை அரங்கேற்றிவருகிறது. இனியும் பா.ஜ.கவினர் மீது அரசியல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  பிரதமர் மோடியை விமர்சித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனக்கான அடையாளம் தேடிக்கொள்வதாக மாநில பா.ஜ.க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

  இந்த கூட்டத்தில், மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×