என் மலர்

  செய்திகள்

  ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இன்றும் முடிவு எட்டப்படவில்லை
  X

  ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இன்றும் முடிவு எட்டப்படவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுடெல்லியில் இன்று கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமலேயே முடிந்துள்ளது.
  நாடெங்கும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதெற்கென தனி மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

  அதேநேரத்தில் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதிலுள்ள அம்சங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்குபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

  அதில் இன்னும் சில அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததால், அக்கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரி மாதத்திலும் கூடியது.

  ஆனால், இரட்டை வரிவிதிப்பு உள்ளிட்ட பல ஷரத்துகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடான கருத்துகள் நீடிப்பதால் முடிவு எட்டப்படாமலேயே கூட்டங்கள் முடிந்தது.

  இந்நிலையில், இன்று மத்திய நிதி மந்திரி தலைமையில் மீண்டும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடியது. ஆனாலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள், வரி விதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தின. இதனால், இன்றும் உரிய முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

  நாடு முழுவதும் ஜி.எஸ்.டி சட்டம் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவதால், குறிப்பிட்ட நாளில் சட்டம் அமலுக்கு வருமா? என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

  Next Story
  ×