என் மலர்

    செய்திகள்

    உ.பி.யில் ஆற்றைக் கடக்க முயன்ற பெண், மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கி பலி
    X

    உ.பி.யில் ஆற்றைக் கடக்க முயன்ற பெண், மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தர பிரதேசத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் உள்ள ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனிதா தேவி (வயது 35). இவர் தனது மூன்று குழந்தையுடன் (பிரதிமா (12), அன்னு (7), கபில் (7)) ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மாவட்டத்தில் உள்ள பர்மா ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இந்த நான்கு பேரையும் ஆற்று நீர் இழுத்துச் சென்றது. குழந்தைகளை காப்பாற்றியே ஆக வேண்டும் எண்ணத்தில் மூன்று குழந்தைகளின் தாயார் சுனிதா தேவி, டையர் டியூபை பிடித்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் படகை நோக்கி முன்னேறினார்.

    ஆனால் மூன்று குழந்தைகளுடன் கயிற்றை பிடித்துக் கொண்டு அவரால் படகிற்கு முன்னேற முடியவில்லை. இதனால் அவர் மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×