என் மலர்

  செய்திகள்

  காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை - இரு வீரர்கள் படுகாயம்
  X

  காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை - இரு வீரர்கள் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்துக்குட்பட்ட ஹஜின் என்ற பகுதியை ஒட்டியுள்ள ஷாகுன்ட் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

  இதையடுத்து, அந்தப் பகுதியை தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று பின்னிரவு சுற்றிவளைத்தனர். அந்தப் பகுதியை பிறபகுதிகளுடன் இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன.

  இன்று அதிகாலை பொழுது புலர்ந்ததும் தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

  பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த நாயக் மதன் சிங், கிருஷ்ணா ஆகியோர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் இருவரும் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
  Next Story
  ×