என் மலர்
செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ தளபதி தல்பீர் சிங்
ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகர்:
தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், தல்பீர் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
உதம்பூரில் உள்ள வடக்கு கமாண்டோ தலைமை அலுவலகத்திற்கு சென்ற தல்பீர் சிங் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தல்பீர் சிங்கிற்கு ராணுவ வீரர்கள் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக ராணுவ வீரர்களுக்கு முன்பு தல்பீர் சிங் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

Next Story