search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்
    X

    அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

    வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய உள்துறை செயலாளராக பொறுப்பு வகித்த அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி மாநிலத்தின் துணை நிலை கவர்னராக கடந்த 2013–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த நஜீப் ஜங், கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நஜீப்புக்கு தொடர்ந்து முரண்பாடு நிலவி வந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் அவர் அனுப்பி வைத்தார். நஜீப் ஜங்கின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில், வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய உள்துறை செயலாளராக பொறுப்பு வகித்த அனில் பைஜால்(70) டெல்லி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனில் பைஜாலின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

    1969 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×