என் மலர்

    செய்திகள்

    விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஊழியர்களுக்கு ஆதார் கட்டாயம்: ஜன., 1 முதல் அமல்
    X

    விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஊழியர்களுக்கு ஆதார் கட்டாயம்: ஜன., 1 முதல் அமல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் கட்டாயம் அவசியம் என்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.

    உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    அரசின் மானியங்கள், திட்டப் பலன்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

    ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது.

    பாத யாத்திரை வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்தது.

    இந்நிலையில், விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் கட்டாயம் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை தனது வழிகாட்டுதலில் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

    இந்த விதிமுறைகளானது விமான நிலையத்தில் பணி புரியும் பணிக் குழு மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×