என் மலர்

  செய்திகள்

  ரூபாய் நோட்டு ஒழிப்பு கருப்பு பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை: ராகுல்
  X

  ரூபாய் நோட்டு ஒழிப்பு கருப்பு பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை: ராகுல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று ராகுல் காந்தி கூறிஉள்ளார்.
  புதுடெல்லி:

  500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கோஷங்களை முழங்கி வருகிறது. இப்பிரச்சனையை வைத்து எதிர்கட்சிகள் பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரை முடக்கினர். அதன் பின்னரும் ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

  இந்நிலையில் இன்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டது.

  இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் , ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்தில் எந்தஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. டிசம்பர் 30-ம் தேதி விரைவில் வருகிறது, ஆனால் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பில் எந்தஒரு மாற்றமும் காணப்படவில்லை. சூழ்நிலையானது அப்படியே தொடர்கிறது.

  ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் நோக்கமானது முற்றிலுமாக தோல்வி அடைந்து விட்டது. ரூபாய் நோட்டு நடவடிக்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்ன செய்யப்போகிறார் என்பதையும் அவர் தெரிவிக்கவேண்டும் என்றார்.

  இதனையடுத்து மம்தா பானர்ஜி பேசுகையில் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்தான் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையாகும் என்றார்.

  இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு நிகழ்ச்சி நிரலானது இருக்கவேண்டும் என்றார் மம்தா பானர்ஜி. மத்திய அரசு அது விரும்பியது எல்லாவற்றையும் செய்கிறது, கூட்டாச்சி முறையானது முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இது நெருக்கடி நிலை கிடையாது, சூப்பர் நெருக்கடி நிலையாகும். ஒரு அச்சமற்ற அரசு எதையும் பற்றி கவலைப்படாது.

  50 நாட்கள் கடந்த பின்னரும் இப்போது நிலவும் நிலையானது தொடர்ந்தால் பிரதமர் மோடி பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்வாரா?. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது நாட்டை 20 வருடங்களுக்கு பின் கொண்டு சென்றுவிட்டது என்றார் மம்தா பானர்ஜி.
  Next Story
  ×