search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு விவகாரம்: சோனியா முயற்சி பிசுபிசுத்தது
    X

    ரூபாய் நோட்டு விவகாரம்: சோனியா முயற்சி பிசுபிசுத்தது

    ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக 16 கட்சிகளை ஓரணியில் திரட்டும் சோனியாவின் முயற்சி பிசுபிசுத்தது. காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன.
    புதுடெல்லி:

    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் போது இந்த பிரச்சனையை கையில் எடுத்த காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரள வைத்து பாராளுமன்றத்தை முழுமையாக முடக்கியது.

    பாராளுமன்ற கூட்டத்தின் இறுதி தினத்தன்று பிரதமர் மோடியை இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் சந்தித்து பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க் கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரசுடன் ஒன்று சேரவில்லை.

    இதையடுத்து எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் சோனியா இறங்கினார். டெல்லியில் இன்று காங்கிரஸ் நடத்தும் கூட்டத்துக்கு மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 16 கட்சிகள் பங்கேற்கும் என்று கூறப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று இடது சாரிகள் அறிவித்தனர். அ.தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், தேசிய வாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்ச களும் பங்கேற்கவில்லை.

    இதனால் 16 கட்சிகளை ஓரணியில் திரட்டும் சோனியாவின் முயற்சி பிசுபிசுத்தது. காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன.
    Next Story
    ×