என் மலர்

  செய்திகள்

  2 நாள் சுற்றுப்பயணமாக சந்திரபாபுநாயுடு இன்று திருப்பதி வருகை
  X

  2 நாள் சுற்றுப்பயணமாக சந்திரபாபுநாயுடு இன்று திருப்பதி வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று திருப்பதிக்கு வருகிறார். அதற்காக அவர், இன்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலமாக ரேணிகுண்டா வருகிறார்.
  திருமலை:

  ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) திருப்பதிக்கு வருகிறார்.

  அதற்காக அவர், இன்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலமாக ரேணிகுண்டா வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருப்பதிக்கு வருகிறார். திருப்பதியில் உள்ள நேரு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் 100-வது படமான, ‘கவுதமிபுத்ரா சாதகர்மி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

  அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, காலை 10 மணியில் இருந்து 11.30 மணிவரை நடக்கும் 99-வது இந்திய பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகிறார். மதியம் 12.30 மணிக்கு திருப்பதியில் இருந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து விமானத்தில் அமராவதி செல்கிறார்.

  இந்தத் தகவல், சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×