என் மலர்

  செய்திகள்

  பணமில்லா பரிவர்த்தனை: புறநகர் ரெயில் சீசன் டிக்கெட்டுக்கு 0.5 சதவீதம் தள்ளுபடி
  X

  பணமில்லா பரிவர்த்தனை: புறநகர் ரெயில் சீசன் டிக்கெட்டுக்கு 0.5 சதவீதம் தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புறநகர் ரெயில் சீசன் டிக்கெட்டுக்களுக்கு 0.5 சதவீம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
  கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் எண்ணத்தில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று இந்திய பாரத பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் அளவில் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

  இந்த பணத்திற்கு புதிய பணம் வழங்க போதுமான அளவில் ரிசர்வ் வங்கியால் பணம் அச்சிடப்படவில்லை. இதனால் வங்கி மற்றும் ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதேவேளையில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டதோ, அந்த அளவிற்கு பணம் அச்சிடப்படாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  இதனால் எல்லோரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதற்கு மத்திய அரசு ஊக்கத்தொகை, பம்பர் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது.

  இந்நிலையில் ரெயில்வே துறையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் பயணிகளுக்கு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

  அதன்படி புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய பணமில்லா பரிவர்த்தனை மூலம் சீசன் டிக்கெட்டுக்கள் எடுக்கும் பயணிகளுக்கு 0.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும், பணமில்லா பரிவர்த்தனை செய்பவர்களுக்கு சேவை உள்பட பல சலுகைகளை அறிவித்ததுள்ளது. இது வரும் 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது என்று அறிவித்துள்ளது.
  Next Story
  ×