என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

பணத்தட்டுப்பாடு விவகாரம்: சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிர்ப்பு

ஐதராபாத்:
கருப்பு பணத்தை ஒழிக்கும் திட்டமாக உயர்மதிப்பு நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த போது, அதை முதன் முதலில் வரவேற்றவர் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு.
இதுபற்றி கூறிய சந்திரபாபு நாயுடு 2013-ம் ஆண்டே நான் இது சம்பந்தமான கோரிக்கையை முன்வைத்தேன். இப்போது அதை பிரதமர் நரேந்திர மோடி செய்து காட்டி இருக்கிறார் என்று கூறினார். இதுவரை மோடியின் திட்டத்தை வரவேற்று கருத்துக்களை கூறி வந்தார்.
ஆனால், ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமல் மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருவதையடுத்து சந்திரபாபு நாயுடு தனது மனநிலையை மாற்றி இருக்கிறார்.
விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. மற்றும் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய சந்திரபாபு நாயுடு, நாட்டில் ஏற்பட்டுள்ள பணம் விவகாரம் பிரச்சினை என்னை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு என்ன தீர்வு காணலாம் என தினமும் 2 மணி நேரமாவது யோசித்து பார்க்கிறேன். ஆனால், நான் தலைகுனிவதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என எனக்கு விடை காண முடியவில்லை என்று கூறினார்.
மோடியின் திட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு முதன் முதலாக எதிரான கருத்தை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூபாய் நோட்டு பிரச்சினை மக்களை கடுமையாக பாதித்துள்ளதால் மக்கள் மனதில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சந்திரபாபு நாயுடு மக்கள் மனநிலைக்கு தகுந்தவாறு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.