search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு மோடியின் மனைவி பாராட்டு
    X

    ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு மோடியின் மனைவி பாராட்டு

    பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார்.

    கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே, புதிய 2000 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், நாட்டில் கடுமையாக பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு அவரது மனைவி ஜசோதா பென் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது பேசிய மோடியின் மனைவி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஊழல் மற்றும் கருப்பு பணம் குறையும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் வெளிக் கொண்டு வரப்படும்” என்றார்.
    Next Story
    ×