என் மலர்

  செய்திகள்

  கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாதது ஏன்?: ராகுல்காந்தி கேள்வி
  X

  கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாதது ஏன்?: ராகுல்காந்தி கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவிட்சர்லாந்து அரசு அறிவித்த கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாதது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  பெல்காலி:

  கர்நாடகா மாநிலம் பெல் காவியல் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

  இந்திய வரலாற்றில் முதல்முறையாக பிரதமரே நாட்டில் உள்ள ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்து உள்ளார். பொதுவாக நாட்டு மக்களுக்காக பிரதமர்கள் பணியாற்றுவர். அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடுவர். ஆனால் மோடியோ நமது நாட்டு பொருளாதார அமைப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

  ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுவதும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பாராளுமன்றத்தில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் ரூபாய் நோட்டு பிரச்சினையால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பா.ஜனதா தலைவர்களுக்கு 2 நிமிட நேரம் கூட அவகாசம் இல்லை.

  தங்கள் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்களின் பெயர் பட்டியலை சுவிட்சர்லாந்து நாடு மத்திய அரசிடம் கொடுத்துவிட்டது. இதை வெளியிட வேண்டும் என்று 2½ ஆண்டுகளாக காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதை வெளியிடாதது ஏன்? அவர்களை பிரதமர் மோடி பாதுகாப்பது ஏன்?

  லண்டனில் இருக்கும் விஜய்மல்லையா, லலித் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு கொண்டு வராதது ஏன்? இது குறித்த பதிலை அளிக்க வேண்டும்.

  இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

  Next Story
  ×