என் மலர்

  செய்திகள்

  கூட்டுறவு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட்: மத்திய அரசு அதிகாரி தகவல்
  X

  கூட்டுறவு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட்: மத்திய அரசு அதிகாரி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த 5 தினங்களில் 17 மாநிலங்களில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார்.

  கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த 5 தினங்களில் 17 மாநிலங்களில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 9-ந்தேதி முதல் தடைவிதிக்கப்பட்டது. நவம்பர் 10-ந் தேதியில் இருந்து 15-ந்தேதி வரையிலான 5 தினங்களில் மட்டும் 17 மாநிலங்களில் உள்ள முக்கிய மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

  பல்வேறு ஆண்டுகளாக மாவட்ட கூட்டுறவு வங்கிகள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விவசாயிகள் பெயரில் சட்ட விரோதமாக பணபரி வர்த்தனை செய்யப்பட்டது.

  கேரளாவில் பெரும் பாலான விவசாயிகள், சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியை பயன்படுத்துகிறார்கள். இங்குதான் அதிகபட்சமாக 5 தினங்களில் ரூ. 1,810 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப்பில் ரூ. 1,268 கோடியும், மராட்டியத்தில் ரூ. 1,128 கோடியும் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×