என் மலர்

  செய்திகள்

  பிளிப்கார்ட்டில் ஒன்பிளஸ் 3 விலை ரூ.18,999 மட்டுமே: விற்பனை தேதி அறிவிப்பு
  X

  பிளிப்கார்ட்டில் ஒன்பிளஸ் 3 விலை ரூ.18,999 மட்டுமே: விற்பனை தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளிப்கார்ட் அறிவித்திருக்கும் 'பிக் பில்லியன் டேஸ்' விற்பனை திருவிழாவில் ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போன் 18,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  பெங்களூரு:

  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'பிக் பில்லியன் டேஸ்' எனும் விற்பனை திருவிழாவினை பிளிப்கார்ட் நடத்த இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். அப்படியாக பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

  அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனினை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என விளம்பரம் செய்யப்பட்டது. 20,000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஒன்பிளஸ் 3 அமேசான் தளத்தில் 27,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

  பிளிப்கார்ட் விற்பனை திருவிழாவினை முன்னிட்டு ரூ.9000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.18,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விற்பனை டிசம்பர் 18 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது. பிளிப்கார்ட் விற்பனை குறித்து ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய், பிளிப்கார்ட் நிறுவனரான சச்சின் பன்சாலை தொடர்பு கொண்டு குழப்பம் குறித்து கேள்வி எழுப்பினார். எனினும் பிளிப்கார்ட் தரப்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. 

  இதை தொடர்ந்து ஒன்பிளஸ் மற்றும் அமேசான் சார்பில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் மட்டும் வாங்கக் கோரும் விளம்பரங்கள் வழங்கப்படன. மற்ற இடங்களில் ஒன்பிளஸ் போன்களை வாங்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் மற்றும் ஒன்பிளஸ் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.   

  இது குறித்து எவ்வி்த விளக்கமும் வழங்காத பிளிப்கார்ட், நாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை எங்களுக்கு வழங்கும் விற்பனையாளர்களே நிர்ணயம் செய்வர் என தெரிவித்துள்ளது. அனைத்து சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை குறிப்பிட்ட விற்பனையாளர்களே நிர்ணயம் செய்கின்றனர் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. 

  பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 3 புதியதா அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையா? என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பிளிப்கார்ட் விற்பனை செய்யும் ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போன்களுக்கு வாரண்டி வழங்கப்படுமா? என்பது குறித்தும் எவ்வித தகவலும் இல்லை. 
  Next Story
  ×