search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ரூபாய் நோட்டு, விவசாயிகள் பிரச்சினை தீர்க்க கோரி மனு ஒன்றை அளித்தார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ரூபாய் நோட்டு விவகாரம், விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்கனவே நேரம் கேட்டு இருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்தார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜோதிர் ஆதித்யா, சிந்தியா, ராஜ்பாப்பர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் இன்னல், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை தீர்க்க கோரி ராகுல் காந்தி பிரதமரிடம் மனு கொடுத்தனர்.

    இந்த சந்திப்புக்கு பிறகு ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறும் போது, விவசாயிகள் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டார். அவர்களது கடனை தள்ளுபடி செய்வது பற்றி எதுவும் கூறவில்லை என்றார்.

    மோடியின் தனிப்பட்ட ஊழல் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில், இருவரும் சந்தித்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராகுல்காந்தி கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளை சந்தித்தார். விவசாயிகள் தன்னிடம் கூறிய குறைகளை அவர் பிரதமரிடம் இன்று முறையிட்டு இருக்கிறார்.
    Next Story
    ×