என் மலர்

  செய்திகள்

  மும்பையில் ரூ.1 கோடி பணத்துடன் சிவசேனா கவுன்சிலர் கைது
  X

  மும்பையில் ரூ.1 கோடி பணத்துடன் சிவசேனா கவுன்சிலர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பையில் காரில் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடி பணத்துடன் சிவசேனா கவுன்சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  மும்பை:

  கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருவது தொடர்பாக நாடு முழுவதும் வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

  மும்பையில் உள்ள வாசி போலீஸ் நிலைய குற்றப்பிரிவு போலீசாரும், வருமான வரித்துறையினரும் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  வாசி விகார் மாநகராட்சியை சேர்ந்த சிவசேனா கவுன்சிலர் தனன் ஜெய்காவ்டேயின் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ.1.11 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ரூ.64.5 லட்சம் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

  ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் அதில் அடங்கும். இது தொடர்பாக சிவசேனா கவுன்சிலர் ஜெய்காவ்டேயை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  Next Story
  ×