என் மலர்

  செய்திகள்

  ரூ.15,000 வரை எக்சேஞ்ச் சலுகையில் மோட்டோ M விற்பனை துவங்கியது
  X

  ரூ.15,000 வரை எக்சேஞ்ச் சலுகையில் மோட்டோ M விற்பனை துவங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ M ஸ்மார்ட்போன் அதிகளவு எக்சேஞ்ச் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகின்றது.
  புதுடெல்லி:

  லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ M ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் இன்று துவங்கியது. மோட்டோ M ஸ்மார்ட்போன் இருவித ரேம் மற்றும் மெமரி அளவுகளில் கிடைக்கிறது. 

  3GB ரேம் / 32GB இன்டர்னல் மெமரி மற்றும் 4GB ரேம் / 64GB இன்டர்னல் மெமரி என இரு அளவுகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனிற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 

  பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ M வாங்கும் போது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து அதிகப்பட்சம் ரூ.15,000 வரை தள்ளுபடி பெற முடியும். மோட்டோ M எக்சேஞ்ச் சலுகையானது வாடிக்கையாளர் வழங்கும் ஸ்மார்ட்போனை பொருத்தே அமையும். இத்துடன் கூடுதலாக ரூ.2000 வரை எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. 

  இத்துடன் குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி மற்றும், ரூ.1000 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் மாத தவணை முறையிலும் மோட்டோ M ஸ்மார்ட்போனினை வாங்க முடியும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×