என் மலர்

  செய்திகள்

  83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள்: வரலாறு படைத்த ஜியோ சிம்
  X

  83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள்: வரலாறு படைத்த ஜியோ சிம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி வசதிக்கொண்ட ஜியோ சிம் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
  மும்பை:

  ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அறிமுகம் செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

  இந்நிலையில் 4ஜி சேவையுடன் களமிறங்கிய ஜியோ சிம் அறிமுகமாகி மூன்று மாதங்கள் முழுதாக முடிவடையாத நிலையில், 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

  1 நிமிடத்துக்கு 1000 என்ற ரீதியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் புதிதாக ஜியோ சிம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 3-ம் தேதி வரை ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அழைப்புகள் இலவசம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற ஏர்டெல் நிறுவனத்துக்கு 12 வருடங்களும், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 வருடங்களும் ஆனது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×