என் மலர்

    செய்திகள்

    வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் நாளை முதல் தளர்த்தப்படும்: ரிசர்வ் வங்கி
    X

    வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் நாளை முதல் தளர்த்தப்படும்: ரிசர்வ் வங்கி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் நாளை முதல் தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள்  நாளை முதல் தளர்த்தப்படும். தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வங்கிகளில் நாளை முதல் ரூ.500,ரூ2,000 நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். கட்டுப்பாடுகளால் பணத்தை வங்கியில் செலுத்த தயங்குவதை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளரின் தேவையை பரிசீலித்து கவனத்துடன் பணம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வரம்பிற்கு கூடுதலாக பணத்தை எடுக்க அனுமதி வழங்கி உள்ளது.

    அதாவது, ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு முன்பு டெபாசிட் செய்த தொகையை தற்போது எடுத்துக் கொள்ள முடியும். இருப்பினும் விதிகள் தளர்வு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை வாடிக்கையாளர் வாரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று கடந்த நவம்பர் 14-ம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×