என் மலர்

    செய்திகள்

    இ-பரிவர்த்தனை மூலம் விமான நிலைய பார்க்கிங் கட்டணம் வசூல்: 29-ந்தேதியில் இருந்து அமல்
    X

    இ-பரிவர்த்தனை மூலம் விமான நிலைய பார்க்கிங் கட்டணம் வசூல்: 29-ந்தேதியில் இருந்து அமல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலைய பார்க்கிங் கட்டணங்கள் இனிமேல் இ-பரிவர்த்தனை மூலம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று கூறினார்.

    2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெற்றதால் சில்லறை தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டது. இதை சமாளிப்பதற்காக நாளை வரை (28-ந்தேதி) இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் பணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அறிவித்தது.

    அதன்படி தற்போது விமான நிலையங்களில் பார்க்கிங் பணம் வசூலிக்கப்படவில்லை. இதேவேளையில் அனைவரும் பணம் கையில் வைத்து புழங்காத வகையில் டிஜிட்டல் முறைக்கு (அதாவது இ-பரிவர்த்தனை) மாற வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    மத்திய நிதியமைச்சரும், பொருளாதார விவாகாரத்துறை செயலாளரும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கட்டண வசூலிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு 28-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதன்பின் 29-ந்தேதியில் இருந்து இ-பரிவர்த்தனை மூலம் பார்க்கிங் பணம் வசூலிக்கப்படும் என்று ஏஏஐ அறிவித்ததுள்ளது.

    கட்டண பணத்தை டெபிட்/கிரெடிட் கார்டுகள், பேடிஎம், ப்ரீ ரீசார்ச் மற்றும் பல்வேறு வகையான டிஜிட்டல் பணமாற்றம் மூலம் கட்டலாம் என்று அறிவித்துள்ளது.

    இதன்மூலம் விமான நிலைய பார்க்கிங் இடத்தில் இனிமேல் இ-பரிவர்த்தனை மூலம் தான் பணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×