என் மலர்

  செய்திகள்

  ஆம் ஆத்மி கட்சியின் 4-வது நிறுவன தினம் - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
  X

  ஆம் ஆத்மி கட்சியின் 4-வது நிறுவன தினம் - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம் ஆத்மி கட்சியின் 4-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து விலகினார்.

  பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2012-ம் ஆண்டு அரசியலமைப்பு நிறுவன தினமான நவம்பர் 26-ந்தேதி, ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்து நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

  தற்போது பிரதான கட்சிகளில் ஒன்றாக உருவாகி இருக்கும் ஆம் ஆத்மியின் 4-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.

  இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இன்று (நேற்று) அரசியலமைப்பு நிறுவிய தினம். 4 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் கட்சி தொடங்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி நீண்டநாள் வாழட்டும்’ என்று கூறியுள்ளார்.
  Next Story
  ×