என் மலர்

    செய்திகள்

    திருமணத்துக்கு முன்நாள் இரவு மணப்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு
    X

    திருமணத்துக்கு முன்நாள் இரவு மணப்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தின் திருமணத்துக்கு முந்தையநாள் இரவு மணமகளின் முகத்தில் இரு பெண்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இன்று திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, பரேலி நகரின் கண்டோன்மன்ட் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்றிரவு மணமகளுக்கு சடங்குகள் செய்ய உறவினர்கள் தயாராகி கொண்டிருந்தனர்.

    மணமகள் மட்டும் தனது பாட்டியுடன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது, அந்த அறைக்குள் புகுந்த இரு பெண்களில் ஒருவர் மணமகளை பிடித்துக்கொள்ள, மற்றொரு பெண் அவரது முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்.

    வேதனையால் அந்த இளம்பெண் கூச்சலிட தொடங்கியதும் அறையின் வெளிக்கதவை தாளிட்டுவிட்டு, இரு பெண்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். முகத்தில் ஏற்பட்ட தீக்காயங்களுடன் இன்று மணக்கோலம் காணவேண்டிய அந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×