என் மலர்

  செய்திகள்

  நெஞ்சை உருக்கும் வீடியோ: இறந்த தாயின் உடலை விட்டுப்பிரிய மறுக்கும் குட்டி யானை
  X

  நெஞ்சை உருக்கும் வீடியோ: இறந்த தாயின் உடலை விட்டுப்பிரிய மறுக்கும் குட்டி யானை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்து, உயிரிழந்த தாயின் உடலை விட்டுப்பிரிந்துவர மனமில்லாத குட்டி யானையின் பாசப்போராட்டம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கவுகாத்தி:

  அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்காக உணவுப்பொருள் மற்றும் மூலிகை பூங்கா 150 ஏக்கர் பரப்பளவில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  கட்டப்பட்டு வருகிறது.

  சமீபத்தில், இந்த கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தின் வழியாக ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் வந்துள்ளது. அப்போது அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தடி ஆழப் பள்ளத்துக்குள் அந்த பெண் யானை தவறி விழுந்தது. இதனால், கால் மற்றும் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் அந்த யானை வலியால் துடித்தது.

  தாய் யானையை தொடர்ந்து குட்டி யானையும் பள்ளத்தில் இறங்கி தாய்க்கு உதவிசெய்ய முயற்சித்தது.
  எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த யானையால் பள்ளத்தைவிட்டு எழுந்து வெளியேவர முடியவில்லை சுமார் அரை மணி நேரம் கழித்து அந்த பெண் யானை இறந்துப் போனது. அதன்உடன் வந்த குட்டி யானை தாய் இறந்தது தெரியாமல் அதனை முட்டி எழுப்ப முயற்சி செய்தது.

  இதனை கண்ட பதஞ்சலி ஊழியர்கள் குட்டி யானையை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் அந்த குட்டி யானையின் பாசப்போராட்டத்தைக் காண..,  Next Story
  ×