search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
    X

    டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

    தலைநகர் புதுடெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி அந்த நகரைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக 3 பேரின் சார்பில் அவர்களுடைய தந்தையர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி திரத் சிங் தாக்கூர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்தது.

    நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:-

    பட்டாசு விற்பனையாளர்களுக்கு இனி புது உரிமம் வழங்கப்படாது. புது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை உரிமம் எதுவும் புதுபிக்கப்படாது.

    காற்று மாசுபாடு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, உரிமங்களை சஸ்பெண்ட் செய்ய முடியும்.

    பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் காற்று மாசுபாட்டினை ஏற்படுத்துபவை எவை என்பது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×