என் மலர்

  செய்திகள்

  போராட்டத்தில் போலீசாருக்கு மிரட்டல்: கேரள மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் ஜெயில்
  X

  போராட்டத்தில் போலீசாருக்கு மிரட்டல்: கேரள மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் ஜெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போராட்டத்தின் போது போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கேரள மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரி தொகுதி எம்.எல்.ஏ. ஷாம்சீர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு கண்ணூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

  அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியதாக ஷாம்சீர் மீது கண்ணூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் புகார் செய்தார். அதன்பேரில் கேரள போலீஸ் சட்டம் சி பிரிவின் கீழ் மார்க்சிஸ்டு கட்சியை சேர்ந்த ‌ஷம்சீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  கண்ணூர் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

  இதில் ‌ஷம்சீருக்கு 3 மாத ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்து ‌ஷம்சீர் கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்வார் என தெரிகிறது.
  Next Story
  ×