என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மும்பை பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் வெளியேற்றம்
By
மாலை மலர்25 Nov 2016 11:18 AM GMT (Updated: 25 Nov 2016 11:18 AM GMT)

மும்பையில் உள்ள பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மும்பை:
மும்பை புறநகர்ப் பகுதியான ஜோகேஷ்வரியில் பிரபல பர்னிச்சர் மார்க்கெட் உள்ளது. இன்று மதியம் இப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்தது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
12 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேசமயம், குடியிருப்பு பகுதிக்கும் தீ பரவ வாய்ப்பு இருந்ததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேறும்படி தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர். அத்துடன், வீடுகளில் இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்றுவிடும்படியும் வலியுறுத்தினர்.
தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில், இதில் உயிரிழப்போ காயம் குறித்த தகவல்களோ வெளியாகவில்லை.

Next Story
×