என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பழைய நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்ற அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
By
மாலை மலர்24 Nov 2016 7:15 PM GMT (Updated: 24 Nov 2016 7:15 PM GMT)

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்ற அனுமதிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்த விவசாயி என்.கே.குமார் என்பவர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் மட்டுமே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்ற மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், கடன் வாங்க முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பாலும், கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடையாலும் தமிழகம் மற்றும் கேரள விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதில் பெரிதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.
ஆனால் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளும் ஏற்றுக்கொள்ளவும், அவற்றை கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

Next Story
×