என் மலர்

  செய்திகள்

  ஆசியாவின் இதயம் மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கமாட்டார்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
  X

  ஆசியாவின் இதயம் மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கமாட்டார்: வெளியுறவுத்துறை அமைச்சகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசியாவின் இதயம் மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இன்று தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது.

  ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

  ரஷியா, சீனா, துருக்கி உள்பட ‘சார்க்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதர நாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

  இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் கூட்டாக தலைமை ஏற்கின்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்ள மாட்டார் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இன்று தெரிவித்தார்.
  Next Story
  ×