search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்: வைரல் புகைப்படம்
    X

    திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்: வைரல் புகைப்படம்

    திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் புதுமணத் தம்பதியர் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    கடந்த 8-ம் தேதி இரவு இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் மிகப்பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், தங்களது அன்றாட செலவுகளுக்கே மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம்-கள் முன்பு காத்திருந்து பணம் எடுக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.

    திருமண வீட்டாருக்கு வங்கிகளில் இருந்து பணம் எடுக்க சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும். இந்த அறிவிப்பால் திருமணம் செய்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    தடைகளை மீறி திருமணம் நடந்தாலும் விழாவிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களால் பரிசுப்பொருளை பணமாக வழங்க முடியவில்லை. ஒருசில திருமண விழாக்களில், ஸ்வைப் மெஷின் மூலம் மொய்ப்பணம் வசூலித்துள்ளனர்.

    இந்நிலையில் வட மாநிலமொன்றில் புதிதாக திருமணம் செய்த தம்பதியர் ஸ்வைப் மெஷினுடன் வரவேற்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "விருந்தாளிகளிடம் இருந்து திருமண தம்பதிகள் எந்தவித பிரச்னையுமின்றி பணம் பெற, தம்பதிகளுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரத்தை பரிசாக கொடுக்கலாம்" என ஐடியா கொடுத்து இவர்களின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×